த வெ.க.அரசை கண்டித்து அ.இ.,அதிமுக கவுன்சிலர் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல்..... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 26, 2026

த வெ.க.அரசை கண்டித்து அ.இ.,அதிமுக கவுன்சிலர் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல்.....



 குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்காத த.வெ.க அரசை கண்டித்து கழக கவுன்சிலருடன் இணைந்து பொதுமக்கள் சாலை மறியல் 

-------------------

திருச்சியில் பரபரப்பு 

த.

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்காத த.வெ.க அரசையும், திருச்சி மாநராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கழக கவுன்சிலருடன் இணைந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டில் உள்ள செங்குளம் காலனியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுகாதார கேடு நிலவுவதோடு, நோய் தொற்று உருவாகும் அபாயம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. 

இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத த.வெ.க அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சி.அரவிந்தன் தலைமையில் பாலக்கரை வேர்ஹவுசிங் இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் கழக நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம் மற்றும் இளநிலை பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது குடிநீரில் கழிவு நீர் கலப்பதை இரண்டு நாட்களில் சரி செய்து தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 

கழக நிர்வாகிகளுடன், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages